Breaking News

கன்னியாகுமரி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 50 பயணிகள் படுகாயம் kanniyakumariaccident

அட்மின் மீடியா
0

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் கேரளஅரசுப் பேருந்து ஓட்டுநர் அனிஷ் கிருஷ்ணா (43)சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

தமிழக எல்லையான குமரி மாவட்டத்தில் தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் கேரள பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார் மேலும் இரண்டு பேருந்திலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது  எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர் உடனடியாக அங்கிருந்த மக்கள் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்துல் கேரள அரசு பேருந்து ஓட்டுனர் அனீஸ் கிருஷ்ணாசம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

விபத்து குறித்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback