2 குழந்தைகளை 15 வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த காதல் ஜோடிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா
2 குழந்தைகளை 15 வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த காதல் ஜோடிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா
2020 ஆம் ஆண்டில், ஜாங் தனது இரண்டு குழந்தைகளை 15 வது மாடி ஜன்னலில் இருந்து வீசியதற்காகவும், யே செஞ்சென் தனது காதலனை குழந்தைகளைக் கொல்லத் தூண்டியதற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
சீனாவைச் சேர்ந்த Zhang Bo என்ற நபர், தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அவர்களின் இரண்டு குழந்தைகளின் Zhang இடமே வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் Ye Chengchen என்ற பெண்ணுடன் Zhang Boவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஷாங்கிற்கு தனது முன்னாள் மனைவியுடன் இரண்டு வயது மகளும் ஒரு வயது மகனும் இடையூறாக இருப்பதாக உணர்ந்த Ye Chengchen, குழந்தைகளை கொல்ல வேண்டும் என Zhang Bo-யை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து சன்னல் வழியாக குழந்தைகளை தூக்கி வீசியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் Zhang Bo, Ye Chengchen கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீனா மட்டுமன்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
