Breaking News

காஸாவின் நியூட்டன் மின்சாரம் தயாரிக்கும் 15 வயது இளம் விஞ்ஞானி வீடியோ! Palestinian boy Hossam Al-Atta Newton of Gaza

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் காஸா பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருவதை பார்த்த ஹுசாம் அல் அட்டா என்ற 15 வயது சிறுவன் தன்னிடம் உள்ள குறைவான உபகரணங்களை கொண்டு மின்சாரம் தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார் இவருக்கு காஸாவின் நியூட்டன் என அழைக்கின்றார்கள்


என் சகோதரர்களை இருளில் பார்த்தேன். அவர்கள் கண்களில் பயத்தை மட்டுமே பார்த்தேன். "நான் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒளியையும் கொடுக்க விரும்பினேன்,என " ஹுஸாம் கூறினார்.மேலும் சிறுவயதிலிருந்தே தன் மகன் திறமைசாலி என்றும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை செய்வார் என்றும் அவரது தாய் கூறுகிறார்

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அல் ஜசீரா வீடியோவில்:-

சந்தையில் டைனமோவும் மின்விசிறியையும் வாங்கி அவற்றை வீட்டின் மொட்டைமாடியில் வைத்து காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளார் ஹுசாம். மின்சாரம் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

இரவு, பகலாக காற்று வீசும் போதெல்லாம் மின்சாரம் இருக்கும். மேலும் பேட்டரிகள் வைத்து மின்சாரத்தை சேமித்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனால் 24/7 எங்களிடம் மின்சாரம் இருக்கும் என முக மலர்ச்சியுடன் கூறுகின்றார் ஹுஸாம் அல்-அத்தா

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/ShaykhSulaiman/status/1754274633938026572

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback