Breaking News

உசிலம்பட்டி அருகே எலிக்காய்ச்சலால் 14 குழந்தைகள் பாதிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பரவி கொண்டிருக்கும் போது,  தமிழகத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதாக வெளியான தகவல் பதைபதைக்க செய்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின்  குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில் 3 வயது ஆண் குழந்தை ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் அடுத்தடுத்து பரவிய மர்ம காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காய்ச்சல் குறித்து அறிந்து கொள்ள மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் குழந்தைகளுக்கு பரவுவது எலிக் காய்ச்சல் என பரிசோதனை முடிவு வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் காய்ச்சல் பரவாத வண்ணம் அந்த கிராமத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மூலம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

நேற்று மாலை கலெக்டர் சங்கீதா மொக்கத்தான்பாறை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

எலிக்காய்ச்சல் என்றால் என்ன?

எலியின் சிறுநீரிலிருந்து பரவிய நோய்தான் எலிக்காய்ச்சல். விலங்குகளின் சிறுநீர், உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போதுதான் இவை பரவுகிறது.

இவ்வகை பாதிப்புகள் காய்ச்சல் போலதான் தொடங்கும். சில சமயங்களில் சில உறுப்புகளையே இவை செயல் இழக்க செய்து விடும் . ஆனால் தொடக்கத்திலேயே சிகிச்சை கொடுத்துவிட்டால் சரி செய்து விடலாம். மேலும் இதற்கு போதுமான மருந்துகள் உள்ளன. ஆகவே அச்சப்படத் தேவையில்லை.பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்

உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்

மருத்துவமனை சென்று குழந்தைகளை நேரில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த அய்யப்பன் அவர்கள் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து அதிநவீன சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இந்த காய்ச்சல் பரவாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சிறப்பு முகாம்களை நடத்தி மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback