Breaking News

சையனைடை விட 1,200 மடங்கு கொடிய விஷம் கொண்ட மீனை சமைத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு! Fish eater dies after cooking deadly pufferfish

அட்மின் மீடியா
0

கொடிய விஷம் கொண்ட மீனை சமைத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் நண்பர் ஒருவர் பரிசாக அளித்த Puffer வகை மீனை சமைத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் என்ற நபர் உயிரிழந்துள்ளார்

சையனைடை விட 1,200 மடங்கு விஷம் கொண்ட இந்த மீன் உண்பதற்கு தகுதியற்றது என கூறப்படுகிறது

பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், 30 மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்ட பஃபர் மீனைச் சாப்பிட்டு இறந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது . 

46 வயதான Magno Sergio Gomes, அடையாளம் தெரியாத நண்பர் பரிசாக கொடுத்த மீனை சமைத்து சாப்பிட்டுள்ளார்

அவரது சகோதரி மிரியன் கோம்ஸ் லோப்ஸ் கூறுகையில், 

மேக்னோ அந்த மீனை சமைத்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உடம்பு சரியில்லாமல் போனது மேக்னோ தனது வாயில் உணர்ச்சியற்றதாக உணர ஆரம்பித்தார் மேலும் உடனடியாக  மருத்துவமனைக்கு காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார், உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் இறந்து விட்டார் என கூறியுள்ளார்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback