12 ம் வகுப்பு பொதுத்தேர்வு 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் 12th students public exam hall ticket
அட்மின் மீடியா
0
+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 20 ம் தேதி முதல் ஹால் டிக்கெட் ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி https://www.dge.tn.gov.in/ என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்கள் தங்கக் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள். மார்ச் -2024
தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள மார்ச் - 2024, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 19.02.2024 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் गांना "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR-MARCH-2024 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" ) && Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth). பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.
மார்ச் 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் फ्रांक कंकाल क्रांर्का प् याला (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்