Breaking News

10,12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்னிந்திய கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தென்னிந்திய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024. (சிம்கோ) வின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ் & பல் மருத்துவமனைகள் மற்றும் சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்

கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு டிகிரி தேர்ச்சி

வயது வரம்பு: 21-35 வயது வரை


பணி:-

அலுவலக உதவியாளர்

விற்பனையாளர்

மேற்பார்வையாளர்

காலியிடங்ககளின் எண்ணிக்கை :-

அலுவலக உதவியாளர் – 12

விற்பனையாளர் – 22

மேற்பார்வையாளர் – 14

கல்வித்தகுதி :-

அலுவலக உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ தேர்ச்சி/ ஏதேனும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்பார்வையாளர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

OBC – 21 வயது முதல் 33 வயது வரை

GENERAL / UR / EWS – 21 வயது முதல் 30 வயது வரை

SC/ST – 21 வயது முதல் 35 வயது வரை

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கினை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 29.02.2024

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவண நகல்:-

10ஆம் வகுப்பு சான்றிதழ்

12ஆம் வகுப்பு சான்றிதழ்

இளநிலை பட்டம் / டிப்ளமோ / முதுகலை பட்டம் சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்

ஆதார் அட்டை

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2)

வருமானச் சான்றிதழ் (இருந்தால்)

முன் அனுபவ சான்றிதழ் (இருந்தால்)

தொழில் நுட்பம் மற்றும் பிற தகுதி சான்றிதழ் (இருந்தால்)

24x10cm அஞ்சல் உரையின் மேல் ரூபாய் 27 கான அஞ்சல் தலை ஒட்டப்பட்டு சுய விலாசம் எழுதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லை எனில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கட்டணம் செலுத்திய ரசீது இல்லாத விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

தபால் முகவரி:-

MANAGING DIRECTOR 

SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., 

TOWN HALL CAMPUS, 

NEAR OLD BUS STAND, 

VELLORE- 632004.

தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்,

தலைமை அலுவலகம்,

டவுன் ஹால் வளாகம்,

பழைய பேருந்து நிலையம் அருகில்

வேலூர் – 632004.

அதிகாரப்பூர்வ இணையதளம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://simcoagri.com/our-career.html

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://simcoagri.com/image/main-slider/home-1/simco-application.pdf

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback