10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண்- 500 மார்க் அல்ல 600 முழு விவரம்
அட்மின் மீடியா
0
10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்பப்பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண்-500 மார்க் அல்ல 600 முழு விவரம்
விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை.
விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல், வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்
நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை
தமிழை தாய்மொழியாக கொண்டு, விருப்பப்பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும்.
தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்துடன் விருப்பப்பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். விருப்பப்பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் சான்றிதழில் இடம்பெறும்.
Tags: தமிழக செய்திகள்
