10, +2 பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு சிபிஎஸ்இ அறிவிப்பு CBSE Admit Card 2024
CBSE பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு 2023-24 சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி துவங்கி மார்ச் 13ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதே போன்று, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி பொதுத்தேர்வுகள் துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு http://www.cbse.gov.in/ எனும் சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை மேற்காணும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
12-ம்வகுப்புதேர்வுஅட்டவணை:-
பிப்ரவரி 15 - தொழில்முனைவோர்
பிப்ரவரி 16 -பேங்க்கிங்
பிப்ரவரி 19 -இந்தி
பிப்ரவரி 22- ஆங்கிலம்
பிப்ரவரி 27 -வேதியியல்
பிப்ரவரி 29 -புவியியல்
மார்ச் 4 -இயற்பியல்
மார்ச் 9- கணிதம்
மார்ச் 12- உடற்கல்வி
மார்ச் 15- உளவியல்
மார்ச் 18- பொருளாதாரம்
மார்ச் 19 -உயிரியல்
மார்ச் 22 -அரசியல் அறிவியல்
மார்ச் 23- கணக்கியல்
மார்ச் 27 -வணிக ஆய்வுகள்
மார்ச் 28 -வரலாறு
ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம்
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் அட்டவணை
பிப்ரவரி 15 – ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள்
பிப்ரவரி 19 – சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்
பிப்ரவரி 20- தமிழ் உள்ளிட்ட தேர்வுகள்
பிப்ரவரி 21 - இந்தி
பிப்ரவரி 26 –ஆங்கிலம்
மார்ச் 2 -அறிவியல்
மார்ச் 4 – வீட்டு அறிவியல்
மார்ச் 7 - சமூக அறிவியல்
மார்ச் 11 - கணிதம்
மார்ச் 13 - தகவல் தொழில்நுட்பம்
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி:-
https://www.cbse.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது https://cbseit.in/cbse/web/regn/login.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
2024ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.
அடுத்து அதில் உங்கள் ரோல் எண், பிறந்த தேதி பதிவிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
