Breaking News

அடுத்த ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பொது தேர்வுகள் மத்திய அமைச்சர் அறிவிப்பு Board exams to be conducted twice a year

அட்மின் மீடியா
0

அடுத்த ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பொது தேர்வுகள் மத்திய அமைச்சர் அறிவிப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்

மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. 

மேலும் மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு குறித்த மாணவர்களின் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback