விவசாயிகள் போராட்டம் 1 மாதத்திற்க்கு டெல்லியில் 144 தடை உத்தரவு Farmers protest Delhi 144
தேசிய தலைநகருக்குள் டிராக்டர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகள், எரியக்கூடிய பொருட்கள், செங்கற்கள் மற்றும் கற்கள் போன்ற தற்காலிக ஆயுதங்கள், பெட்ரோல் கேன்கள், சோடா பாட்டில்களை சேகரிப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி - ஹரியாணா எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ஏராளமான பேரிகார்டுகள், முள்வேலிகள், சிமெண்ட் தடுப்புகள் என பல்வேறு ஏற்பாடுகளை டெல்லி மற்றும் ஹரியாணா காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
