Breaking News

வீரதீர செயலுக்காக முதல்வர் கையால் அண்ணா பதக்கம் பெற்ற காயல்பட்டினத்தை சேர்ந்த யாசர் அராபத் முழு விவரம் yasar arafath kayalpattinam

அட்மின் மீடியா
0

வீரதீர செயலுக்காக முதல்வர் கையால் அண்ணா பதக்கம் பெற்ற காயல்பட்டினத்தை சேர்ந்த யாசர் அராபத் முழு விவரம்

குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. 

அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகிய் 3 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்கினார்.

யாசர் அராபத்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது

இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தது

வரலாறு காணாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளத்தில் பலர் சிக்கினர் இதில்  திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். 

தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

டேனியல் செல்வ சிங் 

திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

முகமது ஜுபேர் 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி பஞ்சாயத்து உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வருகிறார் முகமது ஜுபேர் Alt News என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார். 

அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சியின் உண்மை தன்மையை சரிபார்த்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என வெளியிட்டார். 

தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தி பரப்பி வருவதை தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இன மற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாத வண்ணம் செயல்பட்டுள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback