Breaking News

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை வைரல் வீடியோ World's tallest Ambedkar statue

அட்மின் மீடியா
0

World's tallest Ambedkar statue ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை வைரல் வீடியோ statue of social justice vijayawada

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறப்பு. சிலையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.

125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீதுஅமைக்கப்பட்டுள்ளது, இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது

இதனை உருவாக்க சுமார் 400 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

அதேபோல் அம்பேத்கர் சிலை இருக்கும் பகுதியில் பொது மக்கள் காலை மற்றும் மாலையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு, முழுப் பகுதியும் அழகிய பசுமையான நிலப்பரப்பாக மாற்றப்பட்டுள்ளது

சிலை அமைந்துள்ள மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், உணவு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் அமைந்துள்ளன.

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/ysjagan/status/1747623127566180689

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback