Breaking News

பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம் World Economic Forum அறிக்கை

அட்மின் மீடியா
0

பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம் World Economic Forum அறிக்கை

இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் போலி செய்திகள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை என நம்புவதால் பொய் பரப்புவோர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். 


World Economic Forum அறிக்கை

உலக அளவில் தவறான தகவல்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவைப் பொறுத்த வரையில் தவறான தகவல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அச்சுறுத்தலாக இருக்கும் என்று தனது வருடாந்திர உலகளாவிய அபாயங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், உலகளவில் தவறான தகவல்களை அதிகமாக பரப்புவதால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

World Economic Forum அறிக்கை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www3.weforum.org/docs/WEF_The_Global_Risks_Report_2024.pdf

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback