Breaking News

மேற்கு வங்கத்தில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல் என சந்தேகம் சாதுக்கள் மீது கொடூரத் தாக்குதல் வைரல் வீடியோ west bengal Purulia Sadhu Attack

அட்மின் மீடியா
0

மேற்கு வங்கத்தில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல் என சந்தேகம் சாதுக்கள் மீது கொடூரத் தாக்குதல் வைரல் வீடியோ west bengal Purulia Sadhu Attack

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள் மேற்கு வங்க மாநிலம், கங்காசாகரில் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழாவுக்கு ஒரு வாடகை வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள், கடந்த வியாழக்கிழமை மாலை, மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தை அடைந்தனர். மேற்கொண்டு செல்லும் வழி குறித்து இவர்களில் ஒரு சாது, அங்கிருந்த சிறுமிகளிடம் வழிகேட்டார். 

ஆனால் அவரைக் கண்டு சிறுமிகள் பயந்து கூச்சலிட்டு ஓடியதால், உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர். மேலும், அவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து, ஆவேசமடைந்த கூட்டத்தினர், சாதுக்களைப் பிடித்து தாக்கினர்.



தகவலறிந்த உள்ளூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று, சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சாதுக்கள் வழி தவறி வந்ததால், சிறுமிகளிடம் வழி கேட்டுள்ளனர். அவர்கள் தங்களைக் கடத்த முயற்சிப்பதாக சிறுமிகள் கூச்சலிட்டதால் இந்த விபரீத விவகாரம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 12 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என போலிசார் கூறியுள்ளார்கள்



இச்சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி வியாழக்கிழமை நடந்துள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை முதல் இது தொடர்பான வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், சிலர் துறவிகளின் ஆடைகளை கிழித்து அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

வைரல் வீடியோ:-

https://twitter.com/ravipandey2643/status/1746029589179322815

CLICK HERE

https://twitter.com/themauryann/status/1746203113462337556

CLICK HERE

https://twitter.com/surabhi_tiwari_/status/1745999130403414242/video/2

CLICK HERE



Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback