Breaking News

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட ஆதாரம்! Water ice buried at Mars

அட்மின் மீடியா
0

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட ஆதாரம்! Water ice buried at Mars'

செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்துள்ளது செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கி.மீ தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிப்பு. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பூமி தவிர வேறொரு கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 



அதில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்தது

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்துள்ளது செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கி.மீ தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிப்பு. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கண்டறிந்துள்ளது

மேலும் இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீ ஆழமான நீர் அடுக்கில் மூடிவிடும் , மேலும் பூமியின் செங்கடலை நிரப்ப போதுமானது. செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் இது ஆகும்  

மேலும் எங்கள் ஆராய்ச்சிப்படி இந்த பனிக்கட்டி MFF வைப்புகளின் அளவு மற்றும் இருப்பிடம் செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு அவை மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த MFF வைப்புத்தொகைகள் நூற்றுக்கணக்கான மீட்டர் தூசியால் மூடப்பட்டிருக்கின்றன, குறைந்தபட்சம் அடுத்த சில தசாப்தங்களுக்கு அவற்றை அணுக முடியாது. இருப்பினும், நாம் காணும் ஒவ்வொரு பனிக்கட்டியும் செவ்வாய் கிரகத்தின் நீர் உள்ளதற்க்கான ஆதாரம் ஆகும்

 ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback