Breaking News

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம் - மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை Vijay Makkal Iyakkam NEWS

அட்மின் மீடியா
0

சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது.

இந்நிலையில்நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.



நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள் எனவும்  தேர்தலுக்குத் தயாராக இருங்கள் நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

கடந்த ஆண்டு நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 ம் வகுப்பு மற்ரும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார் நடிகர் விஜய் அதேபோல் 

அதேபோல் தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback