வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு முழு விவரம் vangal railway station closed
வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு முழு விவரம்
கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அப்பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேசன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து ரயிலில் ஏறி சென்று வந்தனர். அதனால், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில் ஜனவரி 25ம் தேதி முதல் வாங்கல் ரயில் நிலையத்தை மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்றுஅறிவிப்பு வெளியிட்டது.
இதன்மூலம் இனிமேல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் சேலம்-கரூர் ரயில் நின்று செல்லாது. அதேபோல், பயணிகளுக்கான எந்த சேவையும் அங்கிருக்காது. சேலம்-கரூர் ரயில், மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags: தமிழக செய்திகள்
