Breaking News

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி முழு விவரம்

UPI வசதியை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டுள்ளது

முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகளை பொறுத்து சென்னை நகரில் உள்ள மற்ற  பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது

சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி சோதனை அடிப்படையில் பல்லாவரம் பேருந்து பணிமனையில் இயங்கும் பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் காா்டு மற்றும் யுபிஐ, க்யூஆா் குறியீடு பயன்படுத்தி பயணிகள் கட்டணத்தை செலுத்த முடியும்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு சோதனை அடிப்படையில் சென்னையில் முயற்சி மேற்கொண்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback