Breaking News

unreserved ticket வைத்து ஸ்லீப்பர் கோச்சில் வந்த நபர் பளார் பளார் என கன்னத்தில் அடித்த டி.டி.ஆர் - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

unreserved ticket வைத்து ஸ்லீப்பர் கோச்சில் வந்த நபர் பளார் பளார் என கன்னத்தில் அடித்த டி.டி.ஆர் - வைரல் வீடியோ

உத்திரபிரதேசத்தின்  கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தில் பாராவுனி  மற்றும் லக்னோ இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரயில் பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பரிசோதனை நடத்தினார். அப்போது ஒருவர் டிக்கெட் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஏன் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினாய் என கேட்டு கன்னத்தில் திரும்ப திரும்ப தாக்கினார். மேலும், அந்த பயணியின் துண்டை இழுத்து அவரை துன்புறுத்தினார். அந்த பயணியை அவர் தொடர்ந்து அறைந்ததை அங்கே இருந்த மற்றொரு சக பயணி வீடியோவாக எடுத்தார்.

அந்த டிக்கெட் பரிசோதகர் அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன், வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயற்சித்தார். .தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விசாரணை நடத்த உத்தரவிட்டு, டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்த வீடியோ தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 

அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிக்கெட் பரிசோதகர் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. 

அந்த வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவர் வைத்திருந்ததால் டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியது. 

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/sanjaynirupam/status/1748026410198020301

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback