Breaking News

மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் நடத்தபட்ட ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் முழு விவரம் truck drivers protest news

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடத்தபட்ட ஓட்டுநர்களின் போராட்டம்  தற்காலிகமாக வாபஸ் முழு விவரம்

மேலும் நாடு முழுவதும் டேங்கர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.




புதிய சட்டம்:-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (1860) என்பதை `பாரதிய நியாய சன்ஹிதா' எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) என்பதை 'பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா' எனவும், இந்திய சாட்சியச் சட்டம் (1872) என்பதை 'பாரதிய சாட்சிய அதினியம்' என பா.ஜ.க அரசு மாற்றியுள்ளது

மேலும் இந்திய தண்டனைச் சட்டமான புதிய பாரதிய நியாய சன்ஹிதாவில் `ஹிட் அண்ட் ரன் (Hit-And-Run)' பிரிவில் அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

Hit and Run வழக்கில் சிக்கும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை என கடுமையான தண்டனைகளை இச்சட்டம் வழங்குகிறது

முன்னதாக இந்திய தண்டனைச் சட்டத்தில் ஹிட் அண்ட் ரன் பிரிவில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக இறந்தால் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 

போராட்டம்:-

புதிதாக இயற்றப்பட்டுள்ள கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில் உள்ள சில பிரிவுகளை எதிர்த்து இந்தியா முழுவதும் கார், பேருந்து, லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இச்சட்டங்களை எதிர்த்து மத்திய பிரதேசம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மகாராஷ்டிரா முழுவதும் லாரி, டாக்சி, பஸ் ஓட்டுநர்கள் ஏற்கனவே வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வாகன போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வருகிறது.

ஓட்டுநர் தரப்பினரிடம் கலந்தாலோசிக்காமல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்கள்

லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகின்றனர்



புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாகியுள்ளது. சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

புதிய சட்ட விதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, இது குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை அரசாங்கம் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யும் என்று மத்திய அரசு சார்பில் ஓட்டுநர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback