TNSTC பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு செல்லாது கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்
TNSTC பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு செல்லாது கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது அதனை தொடர்ந்து சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
அதன்பின்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடங்களும் கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன.
ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
அதனை தொடர்ந்து நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களை (TNSTC) சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகளும் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
