Breaking News

TNPSC ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரங்கள் How To Apply TNPSC One Time Registration 2024

அட்மின் மீடியா
0

TNPSC ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பிப்பது எப்படி....முழு விவரங்கள்....

TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் எனப்படும் ஒருமுறைப் பதிவு கட்டாயமாகும்.


அதற்க்கு முதலில்  கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் அதில் புதிய பதிவு செய்ய விழைவோர் என்பதை கிளிக் செய்யுங்கள்

https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==  கிளிக் செய்யவும்

அடுத்து அதில் உங்களுக்கு வேண்டிய லாகின் ஜடியை பதிவு செய்து அதற்க்கு பக்கத்தில் உள்ள பயனாளர் குறியீடு உள்ளதா எனபதை கிளிக் செய்யவும்...

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், தாயார் பெயர், ஆதார் எண்

பாலினம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, தேசிய இனம், மதம், சாதி, 

பத்தாம் வகுப்பு சான்று பதிவு எண், தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம், பத்தாம் வகுப்பு கல்விமுறை, பத்தாம் வகுப்பு சான்றிதழ் எண், 

இமெயில் முகவரி, மொபைல் எண்,  தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் 

அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களது போட்டோவையும், கையெழுத்தையும்  அப்லோட் செய்ய வேண்டும்.

அடுத்து பணம் செலுத்திகொள்ளுங்கள்., பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 
 
விண்ணப்பிக்கும் முன்பு  நீங்கள் சரிபார்க்கவேண்டியது
 
முதலில் ஒரு முறைப் பதிவில் தகவல் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும் 
 
தமிழ் வழியில் படித்தோர் அதற்கான சான்றிதழ்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும் 
 அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 



follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback