பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! tamil nadu govt bus strike
அட்மின் மீடியா
0
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
- கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்,
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,
- 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்,
- வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்
ஆகிய 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்த்திருந்தது
Tags: தமிழக செய்திகள்
