Breaking News

வருடத்திற்கு இருமுறை தோன்றி மறையும் மூஸா அலை பயன்படுத்திய செங்கடல் என பரவும் வீடியோ உண்மை என்ன split sea moses dongshan island

அட்மின் மீடியா
0

split sea moses dongshan island  கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இது செங்கடலில் உள்ள இடம், அங்கு மோசே (நபி மூசா) தனது மக்களுக்காக பார்வோன், பிர்ராவ்ன் ராம்ம்சேஸ் படையில் இருந்து தப்பிக்க ஒரு பாதையை உருவாக்கினார்.  அது இது தானாம் வருடத்திற்கு இருமுறை தோன்றி மறைந்துவிடுமாம் .அல்லாஹு அஹ்லம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ செங்கடல் இல்லை எனவும் அது சீனாவில் உள்ள டோங்ஷான் தீவு என  அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ செங்கடல் இல்லை அந்த வீடியோ சீனாவில் உள்ள டோங்ஷான் தீவு ஆகும்

சீனாவின்புஜியான் குடியரசின் தொலைதூர தெற்கு மாகாணமானத்தில் உள்ள தீவுகளில் ஒன்றுதான் இந்த டோங்ஷான் தீவு ஆகும்

டோங்ஷான் தீவில் உள்ள டோங்லிங் டவுனில் ஒரு பழமையான நீர்நிலை கோட்டை உள்ளது. ஜப்பானிய கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக டோங்ஷான் கோட்டை 1387 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் சோ டெக்சிங் என்பவரால் கட்டப்பட்டது. வாயில் கோபுரம் இன்னும் அப்படியே உள்ளது. 

ஆக சீனாவில் உள்ள டோங்ஷான் தீவில் யாரோ எடுத்த வீடியோவினை இது மூசா அலை பயன்படுத்திய செங்கடல் என சிலர் பரப்புகின்றார்கள் , அதற்க்கு காரணம் கீழே விரிவாக உள்ளது

கேரளாவில் உள்ள பொன்னானி கடற்கரை

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னானி கடற்கரையில் 2018 ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து 

இதில் பாரதப்புழா ஆற்றில் இருந்து அடித்து செல்லப்பட்ட மணல் பொன்னானி கடற்கரை பகுதியில் படிந்ததால் அங்கு மனல்முகடு சுமார் 500 மீட்டர் வரை உருவாகியது  

கடலுக்குள்ளே 500 மீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்ல முடிகிறது. மணல் பகுதியில் நடந்து செல்லும் பொழுது கடலின் நடுவே பாலம் அமைத்து தண்ணீரில் நடந்து செல்வது போல் உள்ளது அதன் வீடியோ கீழே உள்ளது

செங்கடல் இருப்பது:-

செங்கடல் (Red Sea) ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன


இறைவன் ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்குத் தந்த சோதனைகளை மூஸா (அலை) தம் பிரார்த்தனைகளின் மூலம் நீக்கினார்கள். இருப்பினும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் பனூ இஸ்ராயீலர்களுக்கு மாறு செய்தனர்.மூஸா (அலை) இரவோடு இரவாகச் சென்று விடலாம் என்று முடிவு செய்து இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். 

அவர்கள் எகிப்தைவிட்டு செல்வது பற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு மறுநாள் காலையில் தெரிந்து ஃபிர்அவ்ன் தம் படைகளைத் திரட்டிக் கொண்டு அவர்களைத் தேடிப் சென்றார்கள்

இந்த விஷயம் தெரிந்த உடன் இருந்தவர்கள் மூசாவிடம் முறையிட்டார்கள் அதற்க்கு மனம் தளராத மூஸா (அலை) அவர்கள் “பயப்படாதீர்கள்! ஃபிர்அவ்னிடமிருந்து நம்மைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்த நம் இறைவன் துணையிருப்பான்” என்று வேகமாகத் தம் கூட்டத்தினருடன் நகர்ந்தார்கள். 

அப்போது அவர்கள் செல்லும் வழியில் செங்கடல் குறுக்கிட்டது. “நதியை எப்படி நாம் எப்படிக் கடக்கப் போகிறோம். சிக்கிவிட்டோம், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நெருங்கிவிட்டனர்” என்று பயத்தில் அழத் தொடங்கிவிட்டனர்.

இறைவன் மூஸா (அலை) அவர்களைத் தம் கைத்தடியைக் கொண்டு தரையை அடிக்கும்படி கட்டளையிட்டான். மூஸா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்தது. கடல் பிளந்து அவர்களுக்கு வழி விட்டது. மூஸா (அலை) மற்றும் அவர்கள் கூட்டத்தினர் அதில் நடந்து கடந்து சென்றார்கள்.ஆனால் இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக கடந்து விட்டதும் தண்ணீர் மீண்டும் வந்தது எகிப்தியர்கள் அதில் மூழ்கிவிட்டனர் என்பது வரலாறு

மேலும் செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமான ஆழமான கடல். ஆகும் இது எகிப்து முதல் எத்தியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது.

அதேபோல் சூயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).என  இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன.

இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகழ் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும், ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் மண்மேடுகள் காணப்படுவதை 'ரான் வையாத்' என்ற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார் மேலும் ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றொரு கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. 

இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது ,அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது என்பது செய்தி

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

டோங்ஷான் தீவு  முழுமையான வீடியோ பார்க்க 

இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=-xzgTidakfg

கேரளாவில் உள்ள பொன்னானி கடற்கரை வீடியோ பார்க்க 

இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=4QBIY-U_rzo

இந்த வீடியோ கடந்த 29.01.2021 முதல் வேறு ஆடியோவுடன் இணையத்தில் பரவி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://youtube.com/shorts/jOJKrRR7AkU?si=qJBgBlll-bvvqe5r

இந்த வீடியோ கடந்த 13.02.2022 முதல் வேறு ஆடியோவுடன் இணையத்தில் பரவி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.facebook.com/watch/?v=497054595110247

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback