Breaking News

வானில் பறந்து கொன்டிருந்த விமானத்தில் பாம்பு அலறிய பயணிகள் வைரல் வீடியோ Snake on Thai AirAsia’s Bangkok-Phuket flight

அட்மின் மீடியா
0

பாங்காக்கில் இருந்து ஃபூகெட் செல்லும் ஏர் ஏசியா தாய்லாந்து விமானத்தில் பாம்பு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மிகவும், 'அரிதான நிகழ்வு' என்று வீடியோ வைரலாகி வருகிறது

ஜனவரி 13 ம் தேதி தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புக்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் ஏஷியா விமானத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்து பயணிகள் பீதி அடைந்தனர்.

பயணி இருக்கைகளுக்கு மேல் பெட்டிகளை வைப்பதற்கான இடத்தில் பாம்பு ஊர்ந்து சென்றது.இதைக் காட்டும் டிக்டாக் காணொளி இணையத்தில் காட்டுத் தீயைப் போல பரவியது

அந்தப் பாம்பைக் காலி தண்ணீர் புட்டியைப் பயன்படுத்திப் பிடிக்க விமானச் சிப்பந்தி ஒருவர் முயன்றதைக் காணொளியில் காண முடிந்தது.பிறகு அந்தக் காலி தண்ணீர் புட்டியைப் பயன்படுத்தி குப்பைப் பை ஒன்றுக்குள் அந்தப் பாம்பு தள்ளப்பட்டது.


புக்கெட் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த ஏர் ஏஷியா விமானம் தரையிறங்க இருந்தபோது அந்தப் பாம்பைப் பயணிகள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தைச் சோதனையிட்டனர்.விமானத்தில் வேறு பாம்புகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

விமனத்தில் பாம்பு வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/FlightModeblog/status/1747507882671612261

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback