உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் முதலிடம் இந்தியாவிற்க்கு எந்த இடம்? முழு விவரம் Singapore passport ranked world's most powerful in 2024
Singapore passport ranked world's most powerful in 2024 உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகியவை முதலிடத்தை பிடித்துள்ளன.
அதாவது, விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் `சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள்' எனக் கருதப்படுகிறது. இந்த தரவரிசைப் பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
2024ஆம் ஆண்டின் உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் அடங்கிய பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வெளியிட்டுள்ளது.சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (IATA) தரவுகளின் அடிப்படையில் இவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழைய முடியும்.
இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மக்கள் விசா இல்லாமல் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான நாடுகள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்
Tags: இந்திய செய்திகள்
