Breaking News

சவுதி அரேபியாவில் முதல் மதுபானக் கடை முழு விபரம் Saudi Arabia prepares to open first alcohol store for diplomats.

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபான சாலையை திறக்க சவுதி அரேபியா தயாராகி வருகிறது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டிருப்பதால், சவூதி அரேபியாவில் மது விற்பனைக்கும் சவுதி அரேபியாவில் மது அருந்துவம் தடை செய்யப்பட்டிருக்கிறது மதுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. மேலும் மது அருந்தினால் அபராதம், நாடு கடத்தல், சிறை தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படும்.


இந்நிலையில் சவூதி தலைநகர் ரியாத்தில் முதல்முறையாக மதுபானக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி ரியாத் டிப்ளமேட்டிக் குவார்ட்டர் பகுதியில் இந்த மதுக்கடை அமையவுள்ளது. இதன் அருகில் வெளிநாட்டு தூதரகங்கள், தூதர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளின் இல்லங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் இந்த மதுக்கடைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் அனுமதி? 

இது முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமான கடை என்று கூறப்படுகிறது

இந்த மதுக்கடையில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்யப்படும்

மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம், வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும்


மாதாந்திர மதுபானங்களின் விருப்ப மற்றும் பட்ஜெட் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது

சௌதி அரேபியாவில் இளவரசர் முகமது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.அந்த வகையில் அவர் எடுத்த நடவடிக்கைகளான மதச்சார்பற்ற சுற்றுலாவுக்கு அனுமதி, இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், ஆகியவற்றுடன் தற்போது இந்த நடவடிக்கையும் சேர்ந்துள்ளது.

இஸ்லாம் மதத்தில், மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அரேபிய நாடுகளில் மதுக்கடைகள் கிடையாது.தற்போது இந்த புதிய நடைமுறை, சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

News Source:-

 ரொய்ட்டர்ஸ் செய்தி

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback