Breaking News

வைரலான சச்சின் டெண்டுல்கரின் போலி வீடியோ முழு விவரம் Sachin Tendulkar deepfake video

அட்மின் மீடியா
0

Sachin Tendulkar deepfake video வைரலான சச்சின் டெண்டுல்கரின் போலி வீடியோ முழு விவரம் 

தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் முகத்தை அவரது அனுமதியின்றி ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், 'இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. மேலும் இது போன்ற வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களைப் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்க அவர்கள் தரப்பில் இருந்து விரைவான நடவடிக்கை அவசியம் எனபதிவிட்டுள்ளார்

இதற்க்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் போஸ்டில், 'இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி சச்சின். AI ஆல் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் இந்திய பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த விரைவில் ஐடி சட்டத்தின் கீழ் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்துள்ளார்

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் தளத்தில்:-

இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் & பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல் மற்றும் டீப்ஃபேக்குகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது. என பதிவிட்டுள்ளார்

அவரது டிவிட்டர் பதிவு பார்க்க:-

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/sachin_rt/status/1746794062961950824

Tags: FACT CHECK

Give Us Your Feedback