பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவில்லை என பரவும் செய்தி ? உண்மை என்ன Ram Temple Is Being Built Where Babri Masjid Stood And Not 3km Away
அட்மின் மீடியா
0
பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவில்லை என பரவும் செய்தி ? உண்மை என்ன Ram Temple Is Being Built Where Babri Masjid Stood And Not 3km Away
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கட்டுக்கதைகளைக் கூறி அதை இடித்து விட்டு அங்கேதான் கோவில் கட்ட வேண்டும் என்று பிரச்சினை செய்தனர். மேலும் பாபர் மசூதி இருந்த 2.75 ஏக்கர் நிலத்தை நீதி மன்றத்தின் வழியே கைப்பற்றினர்.சரி,
இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தி பிடிங்கிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டினார்களா என்றால் அதுதான் இல்லை. இப்போது அது தெளிவாகி இருக்கிறது.இந்த கோவிலுக்காக சுற்றி இருந்த பல ஏக்கர் நிலங்களை கைப்பற்றியுள்ளனர். அவை எல்லாவற்றையும் சமதளப்படுத்தி மைதானமாக ஆக்கி அதன் ஓரிடத்தில் கோவிலை கட்டி முடித்துள்ளனர்.#இப்போது_அந்த_கோவிலின்_கர்ப்பக்_கிரகம்_எங்கே_அமைந்துள்ளது_என்று_பார்த்தால்_பாபர்_மஸ்ஜித்_இடிக்கப்பட்ட #இடத்திலிருந்து_ஒருகிலோமீட்டர்தள்ளி_கட்டியுள்ளனர்.
அப்படியானால் மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறியது பொய்யா?இப்படி மூன்று கிலோ மீட்டர் தாண்டி கட்ட இயலும் என்றால் பிறகு மஸ்ஜிதை இடித்தது ராமருக்காகவா? கலவரத்துக்காகவா?மக்களே சிந்தியுங்கள். பாஜக சொல்லும் எதுவுமே உண்மை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.படித்ததில் பகிர்ந்தது என்று ஒரு செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முழு விவரம்:-
பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் தான்
ராமர் கோயில் கட்டப்படுகிறது என்று பரவும் செய்தி பொய்யான
செய்தியாகும்.
உண்மையில் பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் தான் இப்போது
ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
GOOGLE MAP ல் பாபர் மசூதி என்று
போடப்பட்ட இடம் பற்றி தேட ஆரம்பித்தோம் ஒன்று ஸ்ரீ ராம்
ஜென்மபூமி மந்திர் மற்றும் மற்ற 'ஸ்ரீ சீதா ராம் மந்திர் என்பதையும் நாம் கண்டுபிடித்தோம்
அந்த சீதா ராம் மந்திர் கூகுள் மேப்பில் ராம் மந்திர் என யாரோ பெயர் மாற்றி உள்ளார்கள், அதனை பலரும் நம்பி பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை என ஷேர் செய்து வருகின்றார்கள் .அந்த இரண்டு இடத்தின் கூகுள் மேப் லின்ங்கை கீழே இணைத்துள்ளோம்.
உண்மையில் பாபர் பள்ளிவாசலை இடித்து தான் இப்போது
ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. எந்த இடத்தில் பாபர் பள்ளிவாசலை
இடித்தார்களோ அதே இடத்தில் தான் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில்
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இப்போது நடந்து வருகிறது
முடிவு:-
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. எனவே, வைரலானது தவறானது. எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
ராமர் மந்திர் கூகுள் மேப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
சீதா மந்திர் கூகுள் மேப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
