பள்ளி மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ சேலத்தில் பரபரப்பு! Pmk mla arul salem
பள்ளி மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ சேலத்தில் பரபரப்பு! Pmk mla arul salem
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பாகல்படி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் அருளானந்தம் தலைமை வகித்தார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டு பேசினார்.
அதன்பின்பு தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அப்போது பாமக எம்.எல். ஏ அருள், இங்கு நடந்தவை அனைத்திற்கும் மாணவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். "என்னை மன்னித்து விடுங்கள்" என்று மாணவர்கள் காலில் சட்டென்று விழுந்தார். அப்போது பலரும் அவரை தடுத்த நிலையில், இரண்டு முறை மாணவ மாணவிகள் முன்பாக விழுந்து மன்னிப்பு கேட்டார்.இதனையடுத்து, இங்கு நடந்தவற்றை மறந்து விட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சைக்கிள் ஓட்டும்போது சாலையில் கவனம் செலுத்த வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறிவிட்டு, மீண்டும் மாணவ மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து மாணவர்களுக்குச் சைக்கிள்களை வழங்கினார்.பாமக சட்டமன்ற உறுப்பினர் மாணவர்கள் காலில் விழுந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
