Breaking News

ரகசிய Pen Camera மூலம் குளியல் அறையில் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது

அட்மின் மீடியா
0

ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை ரகசிய கேமராவில் ஆபாசமாகப் படம் பிடித்த முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார். குளியலறையில் இருந்த ரகசிய கேமரா தொடர்பாக தனது கணவருடன் பெண் அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவர் முதுநிலை பல் மருத்துவம் படித்து வருகிறார். அவரது வீட்டில் 30 வயது பெண் ஒருவர் தனது கணவர் குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். 

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  குளியலறையில் பேனா வடிவில் இருக்கும் ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று அந்த பெண் சந்தேகம் அடைந்து, குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அதில் கேமரா இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இந்த உளவு பார்க்கும் கருவியை யார் இங்கு வைத்தது என தெரியாமல்  அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்

இதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மருத்துவ மாணவர் இப்ராஹிமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback