Breaking News

சீறிபாயும் காளைகள் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க Palamedu Jallikattu Live 2024

அட்மின் மீடியா
0

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

160 பேர் கொண்ட மருத்துவ குழு, 90 பேர் கொண்ட 40 கால்நடை மருத்துவ குழு தயாராக உள்ளது.15 ஆம்புலன்ஸ் மற்றும் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சிறப்பாக களம் காணும் முதல் காளை பிடி வீரருக்கு நிசான் கார் முதல் பரிசு வழங்கப்படுகிறது. 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் காளை பிடி வீரருக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல சிறப்பாக களம் காணும் முதல் காளைக்கு நிசான் கார் முதல் பரிசு வழங்கப்படுகிறது. 

சிறப்பாக களம் காணும் 2-வது காளைக்கு பரிசாக கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசு வழங்கப்பட உள்ளது. 

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என மாலை 5 மணி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

சன் டிவி நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=NrshTrkwgNY

தந்தி டிவி நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=mi51Ijkq5J4

ஐபிசி தமிழ் நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=IuIAPs8C2A4

விகடன் டிவி நேரலை 

CLICK HERE

https://www.youtube.com/watch?v=Q6FqrsfYHNM

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback