Breaking News

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் நெல்லை, தென்காசி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் சீமான் Naam Tamilar Katchi Candidate list 2024 MP Election

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் சீமான்

இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றறு வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஜூன் மாதம் மீண்டும் பதவியேற்றது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

தற்போது 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள்



இந்நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக, தேமுதிக,பாமக,மதிமுக ,விசிக, இன்னும் பல கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சுகள் நடத்தபடாமல் உள்ள நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த சீமான் அவர்கள் அதற்க்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளார் 

இந்நிலையில் பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். 

தென்காசி தொகுதிக்கு கயிலை ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback