Breaking News

My V3 ads நிறுவனம் மீது புகார் , ஆதரவாக கோவையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு

அட்மின் மீடியா
0

யூ-டியூபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக My V3 ads நிறுவனம் மீது புகார் வந்ததை தொடர்ந்து கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன MLM மோசடி நடைபெறுவதாக புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றார்கள்

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இருந்து MLM நிறுவனத்துக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் இன்று கோவையில் திரண்டதால் பரபரப்பு



கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட My V3 Ads நிறுவன எம்.டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், 

நான் முதலில் காவல்துறையினருக்கு, ஒரு முக்கிய கோரிக்கையை வைக்கிறேன். இன்று கோவையில் மக்கள் திரண்டுள்ளதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் காரணம் அல்ல. எங்கள் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு காரணமாக, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரள திட்டமிட்டார்கள். இவ்வளவு கூட்டம் கூட வாய்ப்புள்ளது என்பதால் தான் நான், கலெக்டர் ஆபீஸில் அனைவரும் திரண்டால் கோயம்புத்தூரே ஸ்தம்பித்து விடும். அனைத்து அலுவலகங்களுக்கும் பிரச்சனை வரும். அதிகார வர்க்கமும் பெரிய சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

மேலும், மக்கள் திரண்டுள்ள எல்&டி பைபாஸ் பகுதிக்கு My V3 Ads நிறுவன எம்.டியும் வருகை தந்தார். அரசியல் அழுத்தத்தால் தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மக்கள் தன்னெழுச்சியாக வந்துள்ளதாகவும், அவர்களோடு பங்கேற்க தானும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/sathyashrii/status/1751891749721796820

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback