மிகவும் சுவையான மாட்டிறைச்சிக்காக பீர் கொடுத்து மாடு வளர்க்கும் மார்க் ஜூக்கர்பர்க் முழு விவரம் Mark Zuckerberg is giving cows only beer
அட்மின் மீடியா
0
உலகின் முன்னணி சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் உள்ளவர் மார்க் ஜூக்கர்பர்க்.மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளவர்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில்
கவாயில் உள்ள கோலாவ் பண்ணையில் அவர்
வாக்யு மற்றும் அங்கஸ் இன மாடுகளை வளர்த்து வருவதாகத்
தெரிவித்துள்ளார்.மேலும் மிகச் சிறந்த மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய
வேண்டும் என்பதற்காகவே மாடுகளுக்கு மக்காடமியா உணவைத் தருகிறார்.
மேலும் மாடுகள் அருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பீர் கொடுத்து
பராமரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாடுகளுக்காகதனது பண்னையில் மக்காடமியா மரங்களை
நட்டு வளர்த்து வருவதாகவும் மார்க் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனது மகள் மக்காடமியா மரங்கள் வளர்ச்சிக்கும், பல்வேறு வகையான விலங்குகளின்
பராமரிப்பிற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கிறாள்.இந்த பயணத்தில் இன்னும்
நாங்கள் தொடக்கத்தில் தான் இருக்கிறோம்,
தன்னுடைய எல்லா செயல்களைக் காட்டிலும், இது சுவையானது என்று குறிப்பிட்டு
மாட்டிறைச்சி சாப்பிடும் புகைப்படத்தையும் மார்க் பதிவிட்டு மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது இன்ஸ்டா பதிவு பார்க்க:-
கிளிக் செய்யவும்
https://www.instagram.com/p/C15Lck4SfpS/?utm_source=ig_embed&utm_campaign=loading&img_index=2
Tags: வெளிநாட்டு செய்திகள்