மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண மோசடி ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட ஓட்டுநர் முழு விவரம் Madurai Airport Parking Charges video
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண மோசடி ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட ஓட்டுநர் முழு விவரம்
மதுரை விமான நிலையத்தில் ஓட்டுநர் ஒருவர் 20 நிமிடங்கள் வாகனத்தை விமான நிலையத்தில் நிறுத்திவிட்டு வெளியே வரும்பொழுது அவரிடம் கட்டணமாக 60 ரூபாய் கேட்டுள்ளார் பார்க்கிங் ஊழியர் (ஆனால் அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது) அதிக பணம் கேட்டு வசூல் செய்யும் காட்சியை வீடியோவாக எடுத்துள்ளார் ஓட்டுநர்.
வீடியோ எடுப்பதை அறிந்து வடமாநில சுங்கச்சாவடி ஊழியர் சுதாரித்து 20 ரூபாய் தருமாறு கூறியுள்ளார். அதற்கு பயணி முதலில் 60 ரூபாய் கேட்டுவிட்டு இப்போது இருபது ரூபாய் தருமாறு கூறுகிறீர்கள் என விவாதம் கேட்டுள்ளார் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது.இதற்கு பொறுப்பான ஒப்பந்தக்காரர் மற்றும் வசூலித்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக மேலாளரிடம் விளக்கம் கோரப்பட வேண்டுமென மதுரை விமானநிலைய இயக்குநரை கேட்டுக்கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மதுரை விமான நிலையத்தில் டோல்கேட்டில் உள்ள வட மாநில ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்பதாக இருந்த குற்றச்சாட்டு குறித்து MP மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மதுரை விமான நிலைய இயக்குனரிடம் பேசினேன் இந்த கொடுமைக்கு காரணமான ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை காட்சிப்படுத்தி வெளிப்படுத்தியவரை நான் பாராட்டுகிறேன். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு எனது வேண்டுகோள், இந்த பகல் கொள்ளை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்
அதன்பின்பு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்
மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் செய்யப்பட்ட பிரச்சனை குறித்து விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளார்.அப்பதிலில் “அதுகுறித்து குறித்து வணிக மேலாளர் நேரடி விசாரணையை மேற்கொண்டார். விதிமீறிய வாகனநிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் அப்பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .மேலும் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினிடம் இனி இது நிகழக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.என பதிவிட்டுள்ளார்
https://twitter.com/SuVe4Madurai/status/1752166892398391386
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
