Breaking News

மதரஸா பாடதிட்டத்தில் ராமாயணம் உத்தரகாண்ட் வக்பு வாரிய தலைவர் அறிவிப்பு Madrassas in Uttarakhand to teach Ramayan to students

அட்மின் மீடியா
0

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகள் வக்பு வாரிய தலைவர் அறிவிப்பு

நாடு முழுவதும் மதரஸா எனப்படும் முஸ்லிம்களுக்கான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், வழக்கமான பாடதிட்டங்களுடன் இஸ்லாம் மதம் பற்றி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கான கல்வி நிறுவனங்களான மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் 117 மதரஸாக்களிலும் சம்ஸ்கிருத மொழியுடன் ராமாயணம் குறித்த பாடங்களை கற்பிக்க உள்ளோம். நாம் அரேபியர்களோ, மங்கோலியர்களோ அல்ல, நாம் இந்தியர்கள். இது இந்திய பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் உதவும் என வக்பு வாரிய தலைவர் ஷதாப் ஷாம்ஸ் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த மதரசாக்களில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடதிட்டம் அறிமுகமாக உள்ளது என்றும் அதில் இராமயணம் ஒரு பாடமாக இருக்கும் என்றும் அதற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் உத்திரகாண்ட் வக்ஃபு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். 

முதல்கட்டமாக டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 நகரங்களில் உள்ள மதரஸாக்களில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback