Breaking News

சென்னையில் இலவச ஆட்டோ சேவையை தொடங்கிய KPY பாலா தொடர்பு எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சென்னையில் மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்ல பணமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ, இலவச ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளார் நடிகர் பாலா! உதவி தேவைப்படும் மக்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை 9176878751 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அறிவித்துள்ளார்

நகைச்சுவை நடிகர் பாலா, சென்னை அனகாபுத்தூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்தார், மேலும் இந்த ஆட்டோ முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக இயக்கப்படும். இந்த சேவை அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

 

தனியார் தொலைகாட்சி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 மூலமாக சின்னத்திரைக்கு வந்ததவர் தான் பாலா. அதனை தொடர்ந்து சினிமால் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்துள்ளார்

இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது தொடங்கி முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா

இவர் கடந்த ஆண்டு அறந்தாங்கியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார். அதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வழ்ழங்கினார் நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார், அதனை தொடர்ந்து ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தான் தங்கியிருந்த அனகாபுத்தூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.3 லட்சத்தை, அப் பகுதி மக்களுக்கு தலா 1000 வீதம் ரொக்கமாக நேரில் சென்று வழங்கினார்.

இந்தநிலையில்,  சென்னையில் உள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்காக இலவச ஆட்டோ ஒன்றை வழங்கி உள்ளார் பாலா.

மேலும் இந்த ஆட்டோவில் பயனம் செய்ய முற்றிலும் இலவசம் ஆகும், இந்த வசதியை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என நினைக்கும் மக்கள் ,கர்ப்பிணி பெண்களும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்

அதேபோல் இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படும். மேலும் இந்த ஆட்டோவிற்கான வரவேற்பை தொடர்ந்து பிற பகுதிகளிலும் இதுபோன்ற சேவையை தொடங்க இருக்கின்றேன் இந்த ஆட்டோவை ஓட்டும் ஓட்டுநருக்கான பணத்தையும் பெட்ரோல் செலவையும் நான் என் சொந்த செலவில் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback