Breaking News

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடக்கவுள்ள முதல் ஜல்லிக்கட்டு போட்டி லைவ் Keelakarai Jallikattu Live 2024

அட்மின் மீடியா
0

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடக்கவுள்ள முதல் ஜல்லிக்கட்டு போட்டி லைவ் 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிகிறார்கள். ஆனாலும், இதுநாள் வரையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என தனியாக மைதானம் எதுவும் அமைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் 

கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தற்போது ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் உலக தரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ளது

மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டபட்ட் ஜல்லிகட்டு அரங்கத்திற்க்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது

கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, மதுரையில் அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் விறு விறுப்பாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திற்ந்து வைத்துள்ளார். 


இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது

அரங்கத்திற்கு வரும் வகையில் பல்வேறு கிராமச் சாலைகளை இணைக்க, 30 மீட்டர் அகலத்தில் நான்குவழி சாலை போல ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

அரங்கத்தின் முகப்பு தோற்றம் பிரம்மாண்டமாக அரண்மனை போன்று வடிவமைக்கப்ப்ட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலை முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது, 

இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம் அமையப்பட்டுள்ளது.

அரங்கத்திற்கு செல்ல 3 பிரதான வாயில்கள் உள்ளன. 

100 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மினி திரையரங்கம் 

அரங்கத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீரவிளையாட்டுகளை கண்டுகளிப்பது மட்டுமல்லாமல், இந்த வீரவிளையாட்டுகள் தோன்றிய வரலாறு அவை நடந்த விதம், தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்த பழமையான ஜல்லிக்கட்டு போட்டிகள், ஏறு தழுவுதல், எருது கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான பாரம்பரிய விளையாட்டுக்கள் தத்ரூபமான முறையில் அருங்காட்சியக சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டி லைவ் பார்க்க:-

நியூஸ் 24/7 லைவ் பார்க்க

இங்கு கிளிக் செய்யவும்

சன் நியூஸ் லைவ் பார்க்க

இங்கு கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?v=dugFXAsNNmo

https://www.youtube.com/watch?v=eUE8Z4SqMf0

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback