Breaking News

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை வைரல் வீடியோ Indonesia's Marapi volcano erupts again

அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை இன்று மீண்டும் வெடித்து சிதறியது.கடந்த டிசம்பரில் வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் வெடித்து சிதறியது. இதனால் சுமார் 1300 மீட்டர் அளவுக்கு பெருமளவு சாம்பலையும், வெளியேறாத நெருப்புக் குழம்பையும், மராபி எரிமலை கக்கி வருகிறது. இதையடுத்து எரிமலைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களை, அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.



இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது

எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால் எரிமலை ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு தங்குமிடம் அந்நாட்டு அரசாங்கத்தால் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

வைரல் வீடியோ:-

பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/SkyNews/status/1746423459440202199

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback