Breaking News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உயிரிழந்தார் Ilaiyaraaja's daughter and playback singer Bhavatharini dies

அட்மின் மீடியா
0

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

பவதாரிணியின் மறைவு தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி திரை பின்னணி பாடகியாவார்.மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. 

சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பவதாரணி, ஒரு விளம்பர நிறுவன நிர்வாகியாவார். இவர்களுக்கு குழந்தை இல்லை 

புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையில் உள்ள அவரது உடல் நாளை சென்னைக்கு எடுத்து வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback