Google Map வழியை நம்பி நடைபாதை படிக்கட்டுகளில் சிக்கிய கார் வீடியோ
Google Map வழியை நம்பி நடைபாதை படிக்கட்டுகளில் சிக்கிய கார் வீடியோ
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா வந்த கர்நாடக மாநில இளைஞர்கள் Google Map-ஐ நம்பி ஆபத்தான படிக்கட்டில் சொகுசு காரை இறக்கி சிக்கிக் கொண்டனர்!
கர்நாடகாவை சேர்ந்த சிலர், உதகைக்கு காரில் சுற்றுலா சென்றனர். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உதகை – கூடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் GOOGLE MAP செயலி உதவியுடன், ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என மேப்பில் காட்டப்பட்ட பகுதி வழியாக காரை இயக்கியிருக்கிறார். அப்போது தவறான பாதையில் சென்றதால், பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை படிக்கட்டுகளில் கார் சிக்கியது.
இதனையடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் காவல்துறையினர் அந்த காரை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த பகுதியை கடந்து செல்ல உதவினர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/tamilpatrica/status/1751873602796847366
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ