தண்ணீர் இருக்கும் புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள் வீடியோ இணைப்பு GJ 9827 D
தண்ணீர் இருக்கும் புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள் வீடியோ இணைப்பு GJ 9827 D
இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான ஒரே கிரகமாக நம்பப்படுகிறது. இருப்பினும் உயிர்கள் இருந்ததற்கான மற்றும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்த்தில் உள்ளனவா என்கிற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் GJ 9827 D என்ற புதிய கிரகத்தை கண்டு பிடித்தது
மேலும் இந்த புதிய கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த GJ 9827 D கிரகத்தில் பாறைகள் நிறைந்துள்ளது மேலும் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால் வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அங்குள்ள வெப்பநிலை 800 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உள்ளதால், 'ஜிஜே 9827டி' கிரகத்தில் எந்த வகையான உயிரினங்களும் இருப்பதற்கு சாத்தியமில்லை எனவும் இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும்போது இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/NASAExoplanets/status/1750979546650693848
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்
