அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு முழு விவரம் Former Minister kp anbalagan daughter in law dies
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு முழு விவரம்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா காலமானார். அவருக்கு வயது 30
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்
கடந்த 18ம் தேதி தருமபுரி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது எதிர்பாரதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டார். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்
சுமார் 80 % தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
