Breaking News

fastag kyc update KYC முடிக்கப்படாத FASTAG ஜன.31ஆம் தேதியுடன் முடக்கப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0
fastag kyc update KYC முடிக்கப்படாத FASTAG ஜன.31ஆம் தேதியுடன் முடக்கப்படும் என அறிவிப்பு

KYC முடிக்கப்படாத FASTAG கணக்குகள் ஜன.31ஆம் தேதியுடன் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக NHAI வெளியிட்டுள்ள அறிவிப்பில், FASTAGஇல் பணம் இருந்தாலும் KYC நிறைவு செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது மேலும் விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சுங்கச்சாவடி ஊழியர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.




வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்ட் டேக் கார்டுகளை ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்ய சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேஒய்சி அப்டேட் செய்யப்படாத பாஸ்ட் டேக் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வாகனத்திற்கு ஒரு பாஸ்டர் கார்டு தான் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் பாஸ்டர் காடுகளை கேஒய்சி அப்டேட் செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. 


fastag kyc update:-

நீங்கள் எந்த வங்கி மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கி இருக்கிறீர்களோ அந்த வங்கியின் ஆப் உள்ளே சென்று கேஒய்சி அப்டேட் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் அப்டேட் செய்யலாம்.

இதுவரை உங்கள் பாஸ்ட் டேக் கார்டை ஒரு முறை கூட நீங்கள் கேஒய்சி செய்ய வில்லை என்றால் உடனடியாக ஃபாஸ்ட் டேக் இணையதளத்திற்குள் சென்று அங்கு நீங்கள் பதிவு செய்த மொபைல் மூலம் லாகின் செய்து உங்களது பாஸ்ட் டேக் கார்டு கேட்கும் ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்து அதை வைத்து செய்து கொள்ள வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback