Breaking News

Fact Check ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி என பரவும் பொய் செய்தி - உண்மை என்ன

அட்மின் மீடியா
0

இன்று சமூக வலைதளங்களில் பலரும் கால் வலியுடன் தவழ்ந்தே சென்று அயோத்தியில் மோடி காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி. என்று  ஒரு  புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

பாபர் மசூதி இடித்து  அந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது

அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நாடு முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது அதன் பேரில் இன்று பலரும் கலந்து கொண்டனர்

இந்நிலையில் அதிமுக கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது

ஆனால் தனக்கு கால் வலி இருப்பதால் நான் கலந்து கொள்ளவில்லை என கூறினார்

இந்நிலையில் இன்று  அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை ஆனால் அவர் இன்று  கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமியின் ஆலயத்தில் இன்று நடந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள்


ஆனால் அந்த புகைப்படம் போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்

அயோத்தி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினியின் புகைப்படத்தை எடிட் செய்து எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார் என பொய்யாக பரப்பி வருகின்றார்கள்

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம்

CLICK HERE

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கன்னியாகுமரியில் கலந்து கொண்டதற்க்கான ஆதாரம்

CLICK HERE

Tags: அரசியல் அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி FACT CHECK

Give Us Your Feedback