Explained: What is *401# Call forwarding scam யார் சொன்னாலும் *401# என்பதை டயல் செய்யாதீர்கள் மத்திய அரசு எச்சரிக்கை
Explained: What is *401# Call forwarding scam யார் சொன்னாலும் *401# என்பதை டயல் செய்யாதீர்கள் மத்திய அரசு எச்சரிக்கை
பொதுமக்கள் யாரும் *401#என்ற எண்ணை அழைக்க வேண்டாம். இது புதிய வகை மோசடி என மத்திய அர்சு பொது மக்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது
தற்போது செல்போன் நிறுவனத்தில் இருந்து வருவது போல அழைப்பு வந்து *401#என்ற எண்ணை டயல் செய்ய சொன்னால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாறாக அதற்கு பதில் அளித்தால் உங்களது தகவல்களை மோசடிக்காரர்கள் திருடி பல்வேறு வகையான திருட்டுகளில் ஈடுபடுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர், சேவை மைய பிரதி, தொழில்நுட்ப பணியாளர் என்ற பெயரில் மர்ம நபர்கள் தொடர்புகொள்கின்றனர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் அல்லது தொலைத்தொடர்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்னையைச் சரி செய்ய ‘*401#’-ஐ தொடர்ந்து அவர்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனர். இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
என்ன நடக்கும்:-
ஒருவர் தங்களது கைப்பேசியிலிருந்து *401# என்று டயல் செய்தால், அந்த கைப்பேசிக்கு வரும் அழைப்புகள் பார்வர்டு செய்யப்ப்டும்
அதாவது, நமது காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள எண் இல்லாத ஒரு எண்ணில் இருந்து நமது செல்போனுக்கு வரும் அழைப்புகளை கால் ஃபார்வேடு செய்வதாகும்.
இதன் மூலம் மோசடியாளர்கள் நமக்கு வரும் அழைப்பு அவர்கள் கைப்பேசியில் பெற்று பல மோசடிகளில் ஈடுபடலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-
https://twitter.com/Cyberdost/status/1747150216959254691
Tags: முக்கிய செய்தி
