Breaking News

மனித மூளையில் சிப் சோதனையைத் தொடங்கிய எலான் மஸ்க்கின் நியூராலிங்க் அதிகாரபூர்வ அறிவிப்பு elon musk neuralink

அட்மின் மீடியா
0

மனித மூளையில் சிப் சோதனையைத் தொடங்கிய எலான் மஸ்க்கின் நியூராலிங்க் அதிகாரபூர்வ அறிவிப்பு

மனித மூளையில் 'சிப்' - சோதனையைத் தொடங்கியது 'நியூராலிங்க்' எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான 'சிப்'-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியுள்ளது

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அச்சோதனை நடைபெற்றுள்ளது.

எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள நியுராலிங்க் நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டர் சிப் பதிக்கும் முயற்சியில் இறங்க உள்ளதாக எலான் மஸ்க் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார.

 

மனித மூளையில் இந்த சிப்பை வைப்பதன் மூலம் மூளையின் செயல்பாட்டை இந்த சிப் புரிந்துகொண்டு, அதை திரையில் எழுத்துக்களாக வெளிப்படுத்தும்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பலனளிக்கும்

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளாதால் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்க்கான அனுமதி கேட்கும் பணியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback