முஸ்லீம் பெண்கள் மறுமணம் செய்தாலும் முதல் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை உண்டு பம்பாய் உயர்நீதிமன்றம் Divorced Muslim woman’s right to maintenance from ex-husband
Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 (MWPA) விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்கள் தங்கள் முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை நிபந்தனையற்றது என்றும் மறுமணத்திற்குப் பிறகும் அவர்கள் தங்கள் முன்னாள் கணவரிடமிருந்து நியாயமான தொகையை கோரலாம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (MWPA) 1986 இன் பிரிவு 3(1)(a) இல் மறுமணம் என்ற வார்த்தை இல்லை என்று கூறியது. அவர்களின் முன்னாள் கணவர்களிடமிருந்து நியாயமான மற்றும் நியாயமான ஏற்பாடு மற்றும் பராமரிப்பு பெற உரிமையுண்டு எனவும் Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 (MWPA) சட்டம் முஸ்லீம் பெண்களின் அவலநிலையைத் தடுக்கவும், விவாகரத்துக்குப் பிறகும் இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்தவும் முயல்கிறது" என்று நீதிபதி ராஜேஷ் பாட்டீல் கூறியுள்ளார்
சட்டத்தின் சட்ட நோக்கம் தெளிவாக உள்ளது. இது 'அனைத்து' விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஆகும். MWPA இல் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நிபந்தனையற்றது. மறுமணத்தின் அடிப்படையில் முன்னாள் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை மட்டுப்படுத்த இந்தச் சட்டம் எங்கும் கட்டுப்படுத்தவில்லை” என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்
மஹாராஷ்டிராவில் இஸ்லாமிய முறைபடி கடந்த 2005 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்க்கு பின்பு கணவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்துள்ளார் ,அச்சமயம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லூனில் பெற்றோருடன் தங்கியிருந்தார் அந்த பென், இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2008-ல் இவர்களுக்கு விவாகரத்தானது.
அதனை தொடர்ந்து கடந்த 2012-ல் அந்தப் பெண் இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் பிரிவு 3-ன் கீழ் ஜீவனாம்சம் கேட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் வழக்கு முடிவில் ஜீவனாம்ச தொகையாக ரூபாய் 4,32,000 பணத்தை இரண்டு மாத கால இடைவெளிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2017அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பராமரிப்பு தொகை 9 லட்சமாக உயர்த்தப்பட்டது.
ஆனால் அதற்க்கிடையில் அப்பெண் மறுமணம் செய்து கொண்டார். `அந்தப் பெண் மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கு பராமரிப்பு தொகை பெறத் தகுதி இல்லை' என்பதைச் சுட்டிக்காட்டி அவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் பாட்டீல் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் மறுமணத்தைப் பொருட்படுத்தாமல், அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பராமரிப்பு தொகையை அவர் பெற உரிமை உண்டு.கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான விவாகரத்து என்பது பிரிவு 3(1)(a)-ன் கீழ் மனைவிக்கு ஜீவனாம்சம் கோருவதற்கு போதுமானது. எனவே கணவரின் கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என கூறி அவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மறுப்பு செய்தி
